பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299

என்றே பொருள் கொண்டனர். நிகண்டுகளும்[1] ‘திலகம் மஞ்சாடி’ என ஒரே தொடரில் மஞ்சாடி மரமாகக் குறிப்பிடுகின்றன.

நிறுத்தல் அளவைப் பெயர்களுள், பொன்னை நிறுக்கும் அளவைகளுள் ‘மஞ்சாடி’ என்பதும் ஒன்று. இது மஞ்சாடி மரத்தின் விதை; செந்நிறமானது. இதனை, ‘ஆனைக் குன்றிமணி’ என்றும் வழங்குவர். இது இரண்டு குன்றிமணி எடை கொண்டது. 32 குன்றிமணி எடையை ஒரு வராகனெடை என்பர் (ஒரு கிராம்). மாணிக்கக் கல் வகைகளில் ‘குருவிந்தன்’ என்பது ஒன்று. இதன் நிறத்திற்குத் திலக மலரின் நிறத்துடன், எட்டுப் பொருள்களின் நிறத்தைக் கூறியுள்ளனர். இதனை விளக்கும் பாடல் சிலப்பதிகார உரை[2] மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திலகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அடினாந்தீரா (Adenanthera)
தாவரச் சிற்றினப் பெயர் : பவோனினா (pavonina, Linn.)
தாவர இயல்பு : மரம், வளமாக வளரும் இலையுதிர் மரம்.
இலை : இரட்டைப் பிரிவுள்ள சிறகன்ன கூட்டிலை.
சிற்றிலை : ஓர் அங். நீள்முட்டை வடிவானது. பல சிற்றிலைகள் உள. இலையடிச் செதில் நுண்ணியது. விரைவில் உதிரும்.

  1. பிங். நிகண்டு : 2687
  2. சிலப். 2:14:186,187