பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

சங்க இலக்கியத்

இதனை வலியுறுத்தும் செய்தி ஒன்றுண்டு. 1975 ஆம் ஆண்டு தொட்டு மேற்கு ஜெர்மனி நாட்டிலிருந்து ‘தாவர ஆய்வும் வளர்ச்சியும்’, (Plant Research and Development) என்ற பெயரில் ஓர் ஆய்விதழ் வெளியாகி வருகின்றது. இதில் ரோஸ்வித்தா ஷிமிட் (Roswittha schmid) என்ற பேராசிரியர், இன்றைய உலகில் அழிவை நோக்கும் தாவரங்கள் என்ற கட்டுரையில், ஏறத்தாழ 20,000 தாவர இனங்கள் அழிந்தும், அழிவை நோக்கியும் உள்ளன என்று IUCN குழுவினர் கணக்கிட்டுள்ளதாகக் கூறுகின்றார் (தொகுதி: 1 : பக்: 1.04). இதில் அனிச்சமும் ஒன்றாக இருக்கலாமென்ற எண்ணம் எழுகிறது.

இருப்பினும், சீலங்கா தமிழ் மக்களும், மலேசியா தமிழ் மக்களும் அனிச்சமெனக் கருதும் லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற சிறுமரத்தைப் பற்றி எமது ‘பூ மரங்கள்’ என்ற தமிழாக்கப் புத்தகத்தில் (பக். 163) விரிவாகக் காணலாம்.

அனிச்சம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே, அகவிதழ்கள் இணையாதவை
தாவரக் குடும்பம் : லித்ரேசி (Lythraceae)
தாவரப் பேரினப் பெயர் : லாகர்ஸ்ரோமியா (Lagerstroemia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளாஸ்ரீஜினே (flos-reginae)
தாவர இயல்பு : புதர்ச்செடியாகத் தோன்றும், சிறு மரம். ஏறக்குறைய 20 அடி உயரம் வளரும்.
இலை : தனி இலை அகன்றது. பசுமையானது. பெரியது. தண்டின் அடியில் எதிரடுக்கிலும், நுனியில் மாற்றடுக்கிலும் உண்டாகும். இலையின் அடிப்புறம் வெளிர் பச்சை நிறமானது.