இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
398
தாவரப் பேரினப் பெயர் | : | மிமுசாப்ஸ் (Mimusops) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இலெஞ்சி (ilengi) |
தாவர இயல்பு | : | சிறுமரம், 4 முதல் 5 மீ. உயரமானது. எப்பொழுதும் பசுமையாக இருக்கும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | பசிய தனி இலை. பளபளப்பானது. 8-10 செ. மீ நீளமும் 2-3 செ. மீ. அகலமும் உள்ளது. நீர் நிலைக்கு அருகில் உள்ள மரத்தின் இலைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும். |
மஞ்சரி | : | தனிமலர். காம்புடன் இலைக் கோணத்தில் உண்டாகும். |
மலர் | : | மழுங்கிய வெண்மை நிறமானது. மலர்ந்ததும், காம்பிலிருந்து கழன்று விழும். |
புல்லி வட்டம் | : | 8 புறவிதழ் விளிம்புகள் உள்ளன. |
அல்லி வட்டம் | : | 8 அகவிதழ்கள் இணைந்து இருக்கும் அல்லிக்குழல் 3 மி.மீ. நீளமானது. |
மகரந்த வட்டம் | : | 8 மகரந்தத் தாள்களும், அகன்ற பல கூரிய போலி மகரந்தத் தாள்களும் உள்ளன. அல்லி ஒட்டியவை. மலர்ந்தவுடன், இப்பூ காம்பிலிருந்து கழன்று விழும். மையத்தில் சிறு துளை இருக்கும். நறுமணம் உள்ளது. மலர் வாடிய போதும் மணமிருக்கும். |
சூலக வட்டம் | : | 6-8 சூலறைச் சூலகம். சூல்முடி சுபுலேட். |
கனி | : | பெர்ரி என்னும் முட்டை வடிவமான மஞ்சள் நிறமுள்ள சதைக்கனி. 2.5-3 செ.மீ. நீளமானது. விதையில் நறுமண எண்ணெய் உண்டு. |
இதன் மலருக்காக இச்சிறுமரம் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. கருஞ் சிவப்பு நிறமான இதன் அடிமரம் மிக வன்மையானது. வண்டிச் சக்கரங்களுக்கும், வேளாண்மைக் கருவிகளுக்குக் காம்பு செய்வதற்கும் பயன்படும். தமிழ் நாட்டில் இம் மரம் பரவலாக வளர்கிறது.