பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/498

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும். இதனைப் பாரிசாதம் என்றழைப்பர்.

ஓலியேசி என்ற இத்தாவரக் குடும்பத்தை ஒலியாய்டியே (Oleoideae), ஜாஸ்மினாய்டியே (Jasminoideae) என்ற இரு சிறு துணைக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். ஜாஸ்மினம், மெனடோரே, நிக்டாந்தெஸ் என்ற மூன்று பேரினங்களும், ஜாஸ்மினாய்டியே என்ற சிறு குடும்பத்தைச் சார்ந்தவை. ஜாஸ்மினம், நிக்டாந்தெஸ் என்ற இரு பேரினங்கள் நறுமலர்களுக்காகவே இந்திய நாடெங்கும் வளர்க்கப்படுகின்றன.