பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

சங்க இலக்கியத்

மலர்களிலும் ஒவ்வொரு அகவிதழிலும் அடியில் 6-7 இழைகள் அல்லி ஒட்டி உள்ளன.
மகரந்த வட்டம் : மகரந்தத் தாள்கள் ஒவ்வொரு தாளிலும் மகரந்தப் பைகள் முறுக்கினாற் போல 8-10 மி.மீ. நீளமாக உள்ளன.
சூலக வட்டம் : 2 சூலக அறைகளில் பல சூல்கள் உள.
சூல் முடி : சூல் தண்டு இழை போன்றது. நுனியில் சூல் முடிச்சு அடிப்புறத்தில் 5 நுண் குழல் போன்றது.
கனி : நீண்ட கடினமான அமுங்கிய ஒரு புற வெடி கனி. இதனைக் கொண்டு, சதைக் கனியுள்ள அரளியை வேறாகக் காணலாம்.
விதைகள் : ‘ஆப்லாங்’. நுனியில் கோமோ நுண்ணிழைகளுடன் முளை சூழ்தசையுள்ளது. விதையிலைகள் தட்டையானவை.

இதனை, விதைகள் கொண்டு வளர்க்க இயலாது. தண்டுகளைச் சிறு துண்டாக நறுக்கிப் புதைத்து வளர்க்கலாம். மத்திய தரைக்கடல் பகுதியிலும், வட ஆசியாவிலும், பர்சியா வரையில் அழகுச் செடியாக வளர்க்கப்படுகிறது. சப்பான் நாட்டிலும் காணப்படுகிறது. வட இந்தியாவில் நேபாளத்திலிருந்து மத்திய இந்தியா வரை காணப்படுகிறது. இதில் மஞ்சள் அலரியும் உண்டென்பர். 6500 அடி உயரம் வரையிலும் வளரும்.

இதன் இலைகளில் பசுங்கணிக வரிசைகள் இரண்டு இருக்கின்றன. இவ்வியல்பினால், இது வறண்ட பாலை நிலத்திலும் வாழும் என்று அறியப்படும்.

அப்போசைனேசி எனப்படும் இதன் தாவரக் குடும்பத்தில், 155 பேரினங்களும், ஏறக்குறைய 1000 சிற்றினங்களும் உலகின் வெப்பமான பகுதிகளில் வாழ்கின்றன. இக்குடும்பத்தில் 39 பேரினங்கள் இந்தியாவில் உள்ளன என்று ஹூக்கர் குறிப்பிட்டு உள்ளார். இவற்றுள் அலரி (Nerrum) அரளி (Allamanda) இரண்டும் அடங்கும். அலரியில் நீரியம் இன்டிகம், நீரியம் ஒடோரம் என்னும் இரண்டு சிற்றினங்கள் உள.