பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

சங்க இலக்கியத்

தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அகன்ற, பெரிய, பசிய, மெல்லிய, பளபளப்பான, நீள் முட்டை வடிவான தனி இலைகள் எதிரடுக்கில் உண்டாகும். 6–12 அங்குல நீளமும், 1.5-5 அங்குல அகலமும் உள்ளதென்பர்.
மஞ்சரி : கிளை நுனியிலும், இலைக் கோணத்திலும் நுனி வளராப் பூந்துணர் ‘காம்போஸ் சைம்’ எனப்படும்.
மலர் : வெண்மை நிறமானது. இதனால் வெட்பாலை எனப்படுகிறது. கபிலரும் வான்பூங்குடசம் என்றார். 1-2 அங்குல அகலமானதென்பர்.
புல்லி வட்டம் : 5 பிரிவான குறுகிய புறவிதழ்கள் அடியில் சுரப்பிகள் காணப்படும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, மேலே தாம்பாளம் போன்றது. அடியில் அல்லிக் குழல் மெல்லியது. தாதிழைகளுக்கு எதிரில், சற்று விரிந்திருக்கும். மடல்கள் ஐந்தும் வலப்புறமாகத் திருகமைப்பில் காணப்படும்.
மகரந்த வட்டம் : அல்லிக் குழலின் அடியில் தாதிழைகள் உள்ளன. தாதுப்பை ஈட்டி வடிவானது. நுனியில் கூரியது.
சூலக வட்டம் : இரு சூலறைச் சூலகம். இழை போன்ற சூல் தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிளவானது. சூலறைகளில் பல சூல்கள்.
கனி : இரண்டு நீண்ட ஒரு புற வெடி கனிகள் (மெரிகார்ப்) மேலே இணைந்திருக்கும். 8-16 அங்குல நீளமும், அரை அங்குல அகலமும் உள்ளது.
விதை : நீண்ட, குழிந்த, அரை அங்குல நீளமான விதையின் நுனியில் நீண்ட பட்டிழைகள் காணப்படும்: இவை-