பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/515

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

499

எளிதில் உதிரும்; விதையிலை அகன்றிருக்கும்; சூல் முளை குட்டையானது; மேலானது.

இம்மரம் பெரும்பாலும் இமயம் முதல் திருவாங்கூர் வரையிலுமுள்ள காடுகளில் 3500 அடி உயரமான மலைப் பாங்கில் வளரும் என்பர். இப்பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உண்டென்றும், இவை மலாக்கா, சீலங்கா காடுகளில் வளர்கின்றன என்றுங் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என இராகவன். ஆர். எஸ். (1959 பி) என்பாரும், தபதார்சென் (1960) என்பாரும் கூறுவர்.