பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

509

தில்லையஞ் சிறுமரத்திலும் பால் வழியும். இதில் கொடிய நச்சுப் பொருள் இருப்பதால், கண்ணில் பால் படக் கூடாது. இதனுடைய இருபாலான தனிப்பூக்கள் மிகச் சிறியவை. மணமில்லாதன. இவற்றையும் யாரும் விரும்புவதில்லை. எனினும், குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தில்லைப் பூ, பாலைப் பூக்களுடன் முல்லைப் பூவையும் சேர்த்துப் பூப்பந்தல் போடுகின்றார்.

பாலை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி (Apocynaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரைட்டியா (Wrightia)
தாவரச் சிற்றினப் பெயர் : டிங்டோரியா (tinctoria)
தாவர இயல்பு : மரம்
தாவர வளரியல்பு : வறண்ட நிலத்தில் வளரும் இலையுதிர் மரம். 8 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும்.
கிளை : பளபளப்பானது; நுண்மயிர் ஒட்டியிருக்கும்.
இலை : தனி இலை, எதிர் அடுக்கில் நீண்டது. அடியில் நுனியும், குறுகியும், கிளை அடியில் உள்ள இலைகள் 5-5.5 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் உள்ளவை.
கிளையின் மேலே : 11-12 செ.மீ. X 4.5-5 செ.மீ.
இலை நரம்பு : 6-12 இணைகள். இரு பக்கமும் இலையடியில் நரம்புகளின் ஓரமாக நுண் மயிர் காணப்படும்.
இலைக் காம்பு : மிகவும் சிறியது. 2-4 மி.மீ. நீளமானது.
மஞ்சரி : நுனி வளராக் (சைம்) கலப்பு மஞ்சரி. 8-10 செ.மீ. அகன்றுமிருக்கும்.