இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
526
சங்க இலக்கியத்
கூதளம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | கன்வால்வுலேசி (convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஐபோமியா (Ipomoea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | செபியாரியா (sepiaria) |
சங்க இலக்கியப் பெயர் | : | கூதளம் |
தாவர இயல்பு | : | கொடி (சுற்றுக் கொடி) |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | தனியிலை, மாற்றடுக்கானது. |
மஞ்சரி | : | தனி மலர். இலைக் கட்கத்தில் தனித்தும், நுனி வளராப் பூந்துணர் ஆகவும் வளரும். ஐந்தடுக்கானது. |
மலர் | : | (ஊதா) இளஞ்சிவப்பு அல்லது வெண்மை நிறமானது; புனல் வடிவமானது; மலர்ச் செதில் காணப்படும். |
புல்லி வட்டம் | : | 5 பசிய இதழ்கள், நீளமானவை. கனியிலும் காணப்படும். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகி, மேலே புனல் வடிவாகப் பூக்கும். வெண்மை, ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிறமாகப் பூக்கும். |
மகரந்த வட்டம் | : | 5 மகரந்தத் தாள்கள் அல்லி மடலுக்கு உள்ளடங்கி இருக்கும். மகரந்தத் தாள்கள் இழை போன்றவை. ஒரே உயரமில்லை. தாது நுண்முள் அடர்ந்த புறவுறை உடையது. |
சூலக வட்டம் | : | 2 சூற்பைகள்; ஒவ்வொன்றிலும் இரு சூல்கள். சூல்தண்டு இழை போன்றது. சூல்முடி தடித்து முடிச்சு போன்றது. இரு பிளவுள்ளது. |