பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542

சங்க இலக்கியத்

கிளைத்தல் : 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் சிறு கிளைகள் காணப்படும்.
இலை : பெரிய கூட்டிலை. 2-3 சிறகமைப்பானது. எதிரடுக்கு 60 முதல் 80 செ. மீ. நீளமானது.
சிற்றிலை வடிவம் : ஈட்டி முனை போன்றது.
விளிம்பு : அரை வட்டப் பற்களை உடையது.
நுனி : நீண்டு கூரியது.
பரப்பு : பசியது, பளபளப்பானது.
காம்பு : மிகச் சிறியது. நுனி இலை காம்பு இல்லாதது போல் இருக்கும்.
மஞ்சரி : ‘காரிம்போஸ் பானிக்கிள்’ என்ற கலப்பு மஞ்சரி. 20-25 செ. மீ. நீளமும், 10-15 செ.மீ. அகலமும், 5-8 செ. மீ, நீளமானது.
மலர் : மலரடிச் செதில் தோற்றமில்லாதது. நீளமான 5 அடுக்கான, வெண்மையான, மணமுள்ள பல மலர்கள் உண்டாகும்.
புல்லி வட்டம் : புல்லிகள் மிகச் சிறியவை. 5 பற்கள் போன்றவை. 1-2 மி. மீ. நீளம்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் அடியில் இணைந்து, நீண்ட குழல் வடிவானது. குழல் 5 முதல் 7 செ. மீ. நீளமானது. மேலே 5 அகவிதழ்கள். மடல் 2-2.5 செ.மீ. அகன்று, விரிந்தது. மடல்கள் சமமில்லாதன. தெளிவற்ற இரு உதடுகள் போன்றன.
மகரந்த வட்டம் : 4 மகரந்தத் தாள்கள். இவற்றுள் 2 நீளமானவை. அல்லிக் குழலுக்கு மேலே, சற்று வெளியேறித் தெரியும்.
மகரந்தப் பைகள் : ஓர் அறை கொண்டவை.
சூலக வட்டம் : சூற்பை சற்றே காம்புடையது. உருளை போன்ற கூம்பு வடிவமானது.
சூல்கள்
: ஒன்று முதல் பல வரிசைகளில் அமைந்திருக்கும்.