இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள்ளி
1. நீர் முள்ளி | : | ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா (Asteracantha longifolia,Nees.) |
2. சுழி முள்ளி | : | அக்காங்தெஸ் இலிசிபோலியஸ் (Acanthus illicifolius,Linn.) |
சங்க இலக்கியங்களில் கூறப்படும் முள்ளிச் செடிகள் இரு வேறு சிற்றினங்களைச் சார்ந்தவை. இவை இரண்டிலும் முட்கள் உண்டு. இவை இரண்டும் நீலநிறப் பூக்களை உடையன.
முள்ளி 1 : நீர் முள்ளி
இது மருத நிலச் சார்புள்ளது. இதன் முள் சற்று வளைந்திருக்கும். மலரின் அடிப்புறம் குழல் போன்றிருக்கும். வெண்ணிறமானது.
சங்க இலக்கியப் பெயர் | : | முள்ளி |
தாவரப் பெயர் | : | ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா (Asteracantha longifolia,Nees.) |
முள்ளி 2 : சுழி முள்ளி
உப்பங்கழியிலும் கடலோரப் பகுதிகளிலும் செழித்துப் புதர் போன்று வளரும் செடி. இதிலும் முட்கள் உண்டு. இலை விளிம்புகளிலும் முட்கள் உள்ளன. இதன் மலர் நல்ல நீல நிறமானது.
சங்க இலக்கியப் பெயர் | : | முள்ளி |
தாவரப் பெயர் | : | அக்காங்தெஸ் இலிசிபோலியஸ் (Acanthus illicifolius,Linn.) |