பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

43

இப்பேரெண்களைக் குறிக்கும் பெயர்களைப் பரிபாடலில் கூறிய வண்ணம் ஒழுங்குபடுத்தித் தமது யாழ்நூலில் ஈழந்தந்த முனிவர் விபுலாநந்த அடிகள் மேற்கண்ட வண்ணம் விளக்கியுள்ளார்கள். மேலும்

“ஐ, அம், பல் எனவரூஉம் இறுதி
 அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல் எழுத்து : 8-98
என்னும் தொல்காப்பிய நூற்பா ஐ என்னும் விகுதியைக் கொண்ட தாமரை (பதுமம்), அம் என்னும் விகுதியைக் கொண்ட சங்கம், விந்தம் வெள்ளம், பல் என்னும் விகுதியைக் கொண்ட ஆம்பல் முதலான எண்ணுப் பெயர்களைக் கூறுகின்றது.

திருமாலின் கைகளின் பெருமையை அதன் எண்ணிக்கைப் பெருக்கில் காட்ட முனையும் கடுவன் இளவெயினனார் ‘பல அடுக்கல் ஆம்பல்’ என்றார்.

“நூறாயிரம் கை ஆறறி கடவுள்
 அனைத்தும் அல்லபல அடுக்கல் ஆம்பல்
 இனைத்துள என எண்வரம்பு அறியா யாக்கையை”

-பரி. 3. 43-45
செல்வக்கடுங்கோ வாழியாதனைப் புலன் அழுக்கற்ற அந்தணாளனாகிய கபிலர் “ஆயிரம் ஆம்பல் ஊழி வாழ்க” என்று வாழ்த்துவாராயினர்.

ஊழியாவது உலகம் தோன்றி மறையுங்காலமென்ப ‘576 ஊழி கொண்டது ஓர் ஆம்பல்’ என்பர் கோவை இளஞ்சேரனார்[1]. ஆம்பல்ஆம்பல் ஒரு கமலம் என்னை? ஆம்பல் எண் மடங்கு கொண்டது ஒரு கமலமாதலின் என்க. ஆம்பல்8

நெய்தல் என்னும் நீர்க்கொடி, தாமரை, ஆம்பல், குவளை, நீலம், கொட்டி முதலியவற்றுடன் சேர்ந்தும் தனித்தும் நன்னீர் நிலைகளிலும் சிற்றருவிகளிலும் உப்பங்கழியிலும் வளரும் இயல்பிற்று. பகைவர்களால் அழிக்கப்பட்ட நெல் வயல்களிலும் நெய்தல் வளர்வதுண்டு. வடித்தெடுத்த வேலின் இலை வடிவான பசிய இலைகளை உடையது. இவ்விலைகள் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். இதற்கு அடிமட்டத் தண்டு என்று பெயர். நீண்ட இலைக் காம்புகளினால் மேல் எழும்பி இலைகள் நீரில் மிதக்கும். விழாக் காலத்து விழவணி


  1. இலக்கியம் ஒரு பூக்காடு: பக் 176