பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நொச்சி–சிந்துவாரம்
வைடெக்ஸ் நிகண்டோ (Vitex nequndo,Linn.)

முற்றுகையைத் தகர்த்தெழும் வீரர்கள் சூடும் போர் மலர் இது. இதன் பூங்கொத்து அகத்துறையிலும் புறத்துறையிலும் பேசப்படுகின்றது.

நொச்சியை ஒரு சிறுமரமெனக் கூறலாம். இதன் கூட்டிலையில் 3 முதல் 7 வரையிலான சிற்றிலைகள் காணப்படும். மலர்கள் சிறியவை, நீல நிறமானவை.

சங்க இலக்கியப் பெயர் : நொச்சி
தாவரப் பெயர் : வைடெக்ஸ் நிகண்டோ
(Vitex nequndo,Linn.)

நொச்சி–சிந்துவாரம் இலக்கியம்

முற்றுகையைத் தகர்த்து எழும் வீரர்கள் சூடும் பூ நொச்சி மலர். ஆதலின் இதுவும் போர் மலராகும். நொச்சி ஒரு சிறு மரம். இது வீட்டின் முற்றத்திலும் வளரும். இதன் மேல் மௌவல் கொடி ஏறிப் படரும்.

நொச்சியில் மனை நொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண்ணொச்சி என்ற வகைகள் உள்ளன. இதன் கூட்டு இலை மயிலடியைப் போன்றது. இந்நொச்சியே இலக்கியத்தில் கூறப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டில் (89) குறிப்பிடப்படும் சிந்துவாரம் என்பதற்குக் கருநொச்சி என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர்.

மூன்றிலை நொச்சி. ஐந்திலை நொச்சி, ஏழிலை நொச்சிகள் உண்டு. இவற்றுள் கருநொச்சியில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் உள்ளன. மயிலடி போன்றதெனின்