பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/596

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

580

சங்க இலக்கியத்

கருநொச்சியே புறத்திணை நொச்சியாகும். இது கார் காலத்தில் கொத்தாகப் பூக்கும். மலர்கள் நீல மணி போன்ற நிறமுடையவை. அரும்புகள் நண்டின் கண்களை யொத்தவை.

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
 மனைநடு மௌவலொடு ஊழ்முகை யவிழ
 கார்எதிர்ந் தன்றால்”
-நற். 115 : 5-7

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
 அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”
-குறுந். 138 : 3-5

“அலவன் கண்ணேய்ப்ப அரும்புஈன்று அவிழ்ந்த
 கருங்குலை நொச்சி”
[1]

“நொச்சிமா அரும்பன்ன கண்ண
 எக்கர் ஞெண்டு”
-நற். 267 : 1-2

நீல நிறமான இதன் மலர்கள் கொத்தாகப் பூக்கும்.

இதனை அணியும் போது நொச்சி மலர்க் கொத்தாக அணிவர். திருவிழாவை அறிவிக்கும் போதும், காக்கைக்குக் கோயில் படைப்பைப் பலியிடும் போதும், குயவன் நொச்சிப் பூங்கொத்தை மாலையாகச் சூடுவான். நொச்சிப் பூ சிவபெருமானுக்கும் சூட்டப் படுவது[2] என்றும், நொச்சியிலை கொண்டு சிவனைப் பரவுவர் என்றும் [3]கூறுவர்.

“மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
 பலிக்கள் ஆர் கைப்பார் முதுகுயவன்
 இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
 விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்”
-நற். 293 : 1-4

மேலும், நொச்சியிலை தழையுடை தொடுக்கவும் பயன்படுமென்பர்.

“ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும்
 கூழை நொச்சி”
-அகநா. 275 : 16-17


  1. கார் . நாற். 39 : 1-2
  2. ஞான. தே. கச்சி ஏகம்பம். 2:2
  3. “நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
    பச்சிலை யிட்டுப் பரவும் தொண்டர்” -பதினோராந்திருமுறை