பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குல்லை
ஆசிமம் கேனம் (Ocimum canum,Sims.)

சங்க நூல்கள் குறிப்பிடும் ‘குல்லை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘கஞ்சங்குல்லை’ என்று உரை கண்டார். இது தழைத்துக் கிளைத்து வளரும் ஒரு வகைச் செடி.

இச்செடி துளசிச் செடியைப் பெரிதும் ஒத்தது. இதனைப் புனத் துளசி என்றும், நாய்த் துளசி என்றும் கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : குல்லை
ஆங்கிலப் பெயர் : வொயில்டு பேசில் (Wild Basil)
தாவரப் பெயர் : ஆசிமம் கேனம்
(Ocimum canum,Sims.)

குல்லை இலக்கியம்

“குல்லை பிடவம் சிறுமா ரோடம்”-குறிஞ். 78

என்று கூறிக் குல்லைக்கு இடங்கொடுத்தார் கபிலர். இதற்கு நச்சினார்க்கினியர் ‘கஞ்சங்குல்லைப்பூ’ என்றே உரை கூறினார்.

“குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்”-கலி. 103 : 3

குல்லை குளவி கூதளம் குவளை”-நற். 376 : 5

“குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த”-சிறுபா. 29

என்றெல்லாம் சங்க நூல்கள் குல்லையைக் கூறுகின்றன. இவற்றைக் கொண்டு இதனை இக்காலத்துச் செடிகளில் எதுவெனத் துணிந்து கூற இயலவில்லை.

நற்றிணை உரைகாரர். இதனை ‘மலைப்பச்சை’ என்கிறார். பிங்கலம் இதனைப் ‘புனத்துளசி’ என்று கூறுகிறது. சேந்தன்