பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சங்க இலக்கியத்

“கட்கமழும் நறுநெய்தல்
 வள்ளிதழ் அவிழ் நீலம்”
-மதுரைக். 250, 251

என மாங்குடி மருதனார் பாடுதலின் நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“தண் கயக் குவளை”-குறிஞ். 63

“நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79 எனக் கபிலரும்,

“மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”-பட்டின. 241

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் கூறுதலின் நெய்தல் வேறு, குவளை வேறு என்பதாயிற்று.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”

-பெரும்பா. 293
எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுதலின் குவளை வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்”-ஐங்கு. 2

என ஓரம்போகியார் பாடுதலின் நீலம் வேறு, நெய்தல் வேறு என்பதோடன்றி நீலம், கருங்குவளை ஆகாமையும் புலனாகும். ‘அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி’ என்ற இப் பெரும் பாணாற்றுப்படை அடிக்கு நச்சினார்க்கினியர் “சாதிலிங்கம் போன்ற இதழை உடைய குவளையொடு நீலப்பூவும் வளர்ந்து” எனக் குவளையைச் செங்குவளையாக்கி உரை கூறியதற்குக் காரணம், உருத்திரங்கண்ணனார் அதனை அரக்கிதழ்க்குவளை என்றதேயாம். மேலும் ‘நீலப்பைஞ்சுனை’ (திருமுருகு. 253) என்பதற்கு நச்சினார்க்கினியர், தருப்பை வளர்ந்த பசிய சுனை என்றாராயினும், பத்துப்பாட்டின் பழைய உரையாசிரியர் ‘நீலோற்பல முதலாகவுள்ள’ என்பதும் உணரற்பாற்று. எனினும் ‘வள்ளிதழ் அவிழ் நீலம்’ (மதுரைக். 251) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பெருமை உடைய இதழ் விரிந்த நீலப்பூ’ என்றே உரை கூறி, ‘மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி’ (பட்டி. 241) என்ற அடியைக் குவளையொடு ‘மாயிதழ் நெய்தலும் மயங்கி’ எனக் கொண்டு கூட்டி, ‘குவளையொடெ பெருமை உடைய இதழ்களை உடைய நெய்தலும்’ என உரை வகுத்துள்ளார். எனவே நச்சினார்க்கினியர் நெய்தலைக் கருங்குவளை எனவும், குவளையைச் செங்குவளை எனவும் கொண்டதோடன்றி நீலமென்பது நீலப்பூ எனக் குறிப்பதுடன் நெய்தற் பூவை, ‘வள்ளிதழ்