பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624

சூலக வட்டம் : பெண் மலரில் சூலகம் 2-5 செல்களை உடையது. ஒரு சூல் மட்டும் உண்டாகி, முதிரும். சூல்தண்டு தடித்து இரு பிளவாக நீண்டு விரிந்து இருக்கும்.
கனி : ‘ட்ரூப்’ எனப்படுவது; கடினமானது. இதில் ஒரு விதையுண்டாகும். விதையுறை மரம் போன்று வலியது. வித்திலைகள் அகன்று விரிந்தவை.

அடிமரம் மிருதுவானது. வெள்ளை நிறமானது. பட்டை கரியது. இம்மரத்தினால் தம்பட்டம் செய்வர். விளையாட்டுக் கருவிகளும் செய்யப் பயன்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என, பாதுரி, கார் (1949) என்போர் கணித்துள்ளனர்.