பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/690

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

674

சங்க இலக்கியத்

“அடுக்கம் நாறலர்காந்தள் நுண்ணேர் தண்ணேர்உருவின்
 துடுப்பெனப் புரையும் நின்திரண்ட நேரரிமுன்கை ”
-கலி. 59 : 3-4
“கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்
 எடுத்த நறவின் குலையலங் காந்தள்”
-கலி. 40 : 11-12
“காந்தளந் துடுப்பின் கவி குலையன்ன
 செறிதொடி முன்கை கூப்பி”
-பட்டின. 153-154

என்பனவற்றால், மகளிரின் கூப்பிய கைகளுக்கு எதிரிணைந்த காந்தள் முகைகள் நன்கு உவமிக்கப்படுகின்றன. இதில் கவிதல் என்பதற்கு ‘ஒன்றோடொன்று சேர்தல்’ என நச்சினார்க்கினியர் மிகப் பொருத்தமாக உரை வகுத்துள்ளார்.

காந்தள் பூ மிக மெல்லிய, நீண்ட, ஆறு, தனித்தனியாகப் பிரிந்த இதழ்களை உடையது. இதழ் விளிம்பு அலை வடிவினது; இதழ்களின் அடிப்புறம் பொன்னிறமாகவும், மேற்புறம் (நுனி) குருதிச் சிவப்பாகவும் இருக்கும். காந்தட்பூவை மகளிர் கைக்கும், இதழ்களைக் கைவிரல்களுக்கும் உவமித்துப் புலவர்கள் நெஞ்சை அள்ளும் கவி மழை பொழிந்துள்ளனர். மலர்ந்த காந்தட்பூ மருதோன்றி இட்டுக் கொண்ட மகளிரின் விரல்களாகவே காட்சி தரும். இதனைக் கண்டு மகிழ்வதல்லது, எழுதிப் புலப்படுத்துவது எளிதன்று. காந்தள் முகையை மகளிர் கைக்கும், மலரிதழ்களை அவர்தம் கை விரல்களுக்குமாகக் கண்டு மகிழ்ந்தனர் நமது செந்தமிழ்ச் சான்றோர். ஓர் எடுத்துக்காட்டு.

“சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
 நலம்பெறு கையின் என்கண்புதைத் தோயோ!
 பாயல் இன்றுணையாகிய பனைத்தோள்
 தோகைமாட்சிய மடந்தை!
 நீயல துளரோ என்நெஞ்சமர்ந் தோரே”
-ஐங். 293

என்ற கபிலர் பாடிய இச்செய்யுளில் குறியிடத்தே வந்த தலைவன் அறியா வண்ணம் பின்புறமாக வந்த தலைவி அவனது.கண்களைத் தனது கைகளால் பொத்திக் கொள்கிறாள். அவளே இது செய்தற்குரியள் என்பதுணர்ந்த அவன், ‘நீயலதுளரோ என்நெஞ்சு அமர்ந்தோரே’ என்று மகிழ்மிதப்பக் களிப்புற்றுக் கூறுகின்றான். ‘காந்தள் நறுங்குலையன்ன நலம்பெறு கையின் என் கண் புதைத்தோயே’ என்புழி, அவளது கைகள் அவனது கண்களைப் பொத்துங்கால், முன் கைகள் இரண்டும் எதிரிணைந்த இரு காந்தளின்