பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தெங்கு–தென்னை
கோகாஸ் நூசிபெரா (Cocos nucifera,Linn.)

சங்க நூல்கள் தென்னை மரத்தைத் ‘தெங்கு’ என்று கூறும். இதற்குத் ‘தாழை’ என்ற பெயரும் உண்டு.

சங்க இலக்கியப் பெயர் : தெங்கு
தாவரப் பெயர் : கோகாஸ் நூசிபெரா
(Cocos nucifera,Linn.)

தெங்கு–தென்னை இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், ‘தாழை’யைக் கூறுவர்.

“தாழை தளவம் முட்டாள் தாமரை” -குறிஞ். 80

தாழை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தெங்கிற்பாளை’ என்று உரை கண்டார். ‘தெங்கு’ எனப்படும் தென்னை ஒரு மரமாகும். இதன் எல்லாப் பாகங்களும் பயன்படும். தென்னையில் விளையும் தேங்காய் உணவுப் பொருள். கடியலூர் உருத்திரங் கண்ணனார் இதனைக் கோள்தெங்கு என்று கூறுவர்

“கோள் தெங்கின் குலை வாழை” -பட். 16

‘கோள்தெங்கு’ என்பதற்குக் ‘குலைகளை உடைய தெங்கு’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்.

குறிஞ்சிப்பாட்டில் வரும் ‘கைதை’ என்பதற்குத் ‘தாழை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், அதே பாட்டில் வரும் ‘தாழை’ என்பதற்குத் தெங்கிற்பாளை என்கிறார். அவர் உரை எழுதிய பிறவிடங்களிலெல்லாம் வரும் தாழை என்பதற்குத் தாழை என்றே உரை கூறுவார். ஆகவே, தெங்கு என்பதே