பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/727

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

711

கண்டு வியந்தோம். உடனே பால் வேறுபாடு தெரியாத, சற்று முதிர்ந்த பல பனங்கன்றுகளிலிருந்து அடையாளமிட்டு, அவற்றின் நார்த்திசுவைக் கொண்டு வந்து, தனித்தனியாக எக்ஸ்ரே படம் எடுத்து வைத்திருந்தோம். நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர், மூன்று கற்றைகளைக் கொண்ட பனங்கன்று பெண் பனையாகவும், இரண்டு கற்றைகளைக் கொண்டவை ஆண் பனையாகவும் பூத்ததை அறிந்து மகிழ்ந்து வியந்தோம்.

இதனால் ஓரிரு ஆண்டுகளிலேயே, ஒரு பனங்கன்று ஆணா, பெண்ணா என்று அறிய முடியுமென்ற ஆய்வு பயனளித்தது. ஆனால், ஆய்வாளர்க்குப் பயனில்லை. ஆய்வு செய்யப்பட்டவிடம் தமிழ்நாடுதானே! நொந்து கொண்டதில் வியப்பில்லை.