பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

83

என்று கபிலர் புன்னாகத்தைக் குறிப்பிட்டுள்ளமையாலும், ‘நாகம்’ என்பதற்குப் புன்னை, வழை. சுரபுன்னை என்று சூடாமணி நிகண்டும்[1] நாகமென்றலின் புன்னாகம் புன்னையாகுமென்று பிங்கல நிகண்டும்[2] விளக்குதலாலும், ‘வழை’ என்பதும் ‘சுரபுன்னை’ என்று நிகண்டுகள் கூறுவதை ஏற்றுக் கொண்டு, ‘புன்னாகம்’ என்பதற்குப் ‘புன்னையின் விசேடம்’ என்றும், நாகம் என்பது சுரபுன்னை, புன்னை, நாகப்பூ என்பன மூன்றும் ஒன்றே என்றும் கொண்டு, உரை கூறினர் போலும் எனக் கோடல் பொருந்தும்.

ஆகவே வழை, சுரபுன்னை, புன்னாகம், நாகம் என்பன புன்னையின் விசேடமாகிய ஒரே மரத்தைக் குறிக்குமெனவும், புன்னை மட்டும் இவற்றின் வேறாயதொரு மரம் எனவும் கொள்ளுதல் கூடும். மேலும் சுரபுன்னைக்கு நாகம் என்ற பெயரும் வழங்கப்பட்டது எனச் சூடாமணி நிகண்டு கூறுவதும், நீளநினைத்தற் குறித்து. தாவரவியல் நூல்கள் புன்னையைக் கலோபில்லம், இனோபில்லம் என்றும், வழை, புன்னாகம் எனப்படும் சுரபுன்னையை ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ் என்றும் குறிப்பிடுகின்றன. இந்நூல்களில் நறுமணமுடைய புன்னையும், புன்னையின் விசேடமாகிய (சுரத்தில் வளரும்) சுரபுன்னையும் தனித்தனியுமாகப் பேசப்படுவதன்றித் தமிழ்நாட்டில் இக்குடும்பத்தைச் சார்ந்த இவ்விரு நறுமண மலருடைய மரங்களே வளர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் நாகம், வழை எனப்படும் சுரபுன்னை மரம் மலைப்புறக் காடுகளிலும், புன்னை மரம் கடலோரமான நெய்தல் நிலத்திலும் வளர்வதும் உற்று நோக்குதற்குரித்து. இவ்விரு மரங்களையும் சங்கப் புலவர்களைப் போல அவை வளருமிடத்திற் கண்டு களித்த எம் போன்றோர்க்கல்லது, மரங்களிலும் மரப்பெயர்களிலும் உளதாகிய இவ்வேறுபாடு ஏனையோர்க்குப் புலனாதல் அரிதென்பதும் ஒன்று. இவ்வுண்மையைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகின்றது. புன்னாகம் : “புன்னைப் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னை பேரேப்”.[3] மற்று, நாகமும் புன்னாகமும் பிற்காலத்தில் ஒன்றேயெனக் கருதப்பட்டன போலும்.

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ்: 91

என்றார் குறிஞ்சிக் கபிலர். இதில் வரும் புன்னாகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் புன்னையின் விசேடம் என்று உரை கூறியுள்-


  1. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4
  2. பிங்கல நிகண்டு : 3717
  3. சூடாமணி நிகண்டு : 4 ம. பெ. தொ : 4