பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சங்க இலக்கியம்

கண்ணையினிதென் றுரைப்பர்: கண்ணுக்குக்

கண்ணாகி விண்ணையளக்குமொளி மேம்படும் ஓர்

இன்பமன்றோ? மூலத்தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் மேலவருமஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞானமிசை யொப்புளதோ -குயிற்பாட்டு: மேலும் அவர்,

பாரடியோ! வானத்திற் புதுமையெல்லாம்

உவகையுற நவகவமாத் தோன்றுங்காட்சி யாரடியிங் கிவைபோலப் புவியின்மீதே யெண்ணரிய பொருள் கொடுத்து இயற்றவல்லார் சீரடியாற் பகவேத முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி வனப்பையெலாஞ் சேரக் காண்பாய் -பாஞ்சாலி சபதம்;

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காணுகின்ற பொருளி லெல்லாம் அழகைக் கண்டு, அதைச் சுவை பயக்க, கவிதை மனம் மணக்க விண்டவரும் ஆவர். “அழகுப் பொருள் என்றும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும்’ (A thing of beauty is a joy for ever) 6T63ruff. oth (lp so spu% so sojoust கானும் அழகுப் பொருளில் கதிர் ஒன்றாகும். அழகின் சிரிப்பில் ஞாயிறு இடம் பெறுகிறது. “ஒளிப்பொருள் நீ; நீ ஞாலத்தொரு பொருள்” என்று அஞ்ஞாயிற்றைச் சுட்டு கின்றார். ஞாயிற்றைச் சிலிர்த்தெழும் சிங்கமாகப் பிறிதோ ரிடத்தில் நோக்குகின்றார்.

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர்மயிர் சிலிர்க்கும் சிங்கமே

மேலும் அவர் வானத் தகளியின் பெருவிளக்கே’ என்றும், “உன்கதிர் இருட்பலாவை உரித்து ஒளிச் சுவுை