பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 125

முதலாவதாக, கலித்தொகையின் ஒரு பாடலில் நிலவு, மூங்கில், குவளைப் பூ, மயில், முதலியவை _லைமகளின் பல்வேறு உறுப்பு நலன்களுக்கு உவமை யாகக் கூறப்பட்டுப் பின் அவை பொருந்தா என விலக்கும் எதிர்மறைக் கூற்றும் உடன் அமையக் காணலாம். இவ்வாறு மறுப்பதால் உவமைகளைக் காட்டிலும் உவமேயப் பொருள் உயர்ந்தது என்னும் கருத்துப் பிறக்கின்றது.

முதலில் தலைமகன் தலைமகளின் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும், மெல்லிய

சாயலையும், இனிய சொற்களையும் கண்டு வியந்து நிற்கிறான். பிறகு அவ்வுறுப்புகளுக்கும் பண்புகளுக்கும் தக்க உவமை கூறிப் பொருத்திப் பாராட்டுகின்றான்.

ஆயினும் அவ் வனைத்தும் அவன் காதலியின் அழகுக்குப் பொருத்தமானதாக . அவன் மனத்திற்கு நிறைவு தருவ தாக இல்லை. எனவே முன்னே உவமை கூறிய பொருள் களையே பொருந்தா எனக் கூறி விலக்கி விடுகின்றான்.

“நெற்றி வியத்தற்குரிய அளவில் தேய்ந்து குறுகி உள்ளது. அதனால் இது பிறைமதியன்று; முகத்தில் மாசு ஒன்றும் இல்லை. அதனால் அது முழும தியன்று. தோள்கள் மூங்கிலையொத்து உள்ளன. எனினும் மூங்கில் தோன்றும் இடமான மலை அங்கில்லை; கண்கள் மலரை நிகர்த் துள்ளன. எனினும் அப் பூக்கள் பூக்கும் சுனை அங்கு இல்லை. அவள் மி கவும் மெல்ல நடக்கிறாள்; எனினும் அவள் மயில் அல்லள். குழைந்து குழைந்து பேசுகின்றாள்; எனினும் அவள் கிளி அல்லள்’ என்று மறுப்புக் குரல் எழுப்பிப் பழகிய உவமைகளை விலக்கி அவள் அழகுச் செவ்வியை மிகுதிப்படுத்தி யுரைக்கின்றான். ஒருவகையில் வியப்புச் சுவையும் கலப்பதனால் மருட்கை உவமை என்றும் உரைக்கலாம். அக் கலிப்பாடல் வருமாறு: