பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம்

126

கில் என நிறுத் தான் நிறுத்தே வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு கினை இ ஐதேய்ந் தன்று பிறையும் அன்று மைதீர்ந் தன்று மதியும் அன்று வேயமர்ந் தன்று மலையும் அன்று பூவமர்ந் தன்று சுனையும் அன்று மெல்ல இயலும் மயிலும் அன்று

சொல்லத் தளரும் கிளியும் அன்று

-கலித்தொகை, 55:6-14

புறநானூற்றிலும் இ த் த ைக ய ጬ_ GUI ፳፻፶) INo இடம் பெற்றுள்ளது. புலவர்களெல்லாம் பாரி பாரி என்று பாரியை

உயர்வாகப் புகழ்கின்றனர். ஆனால் இவ் வுலகில் பாரி மட்டும் இல்லை; மாரியும் உண்டு; அம் மாரி பாரியைப் போலவே உலகோரைப் புரக்கின்றது என்று நிந்தை சொல்லும் போக்கில் பாரியைப் புகழ்ந்திருக்கக் காணலாம்.

பாரிபாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே

-புறநானூறு, 107

தண்டியலங்காரம் இப்பாடலை விலக்கணிக்கு எடுத்துக்

காட்டாகத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இல்பொருள் உவமை

உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கொண்டு வந்து உவ மை கூறுவதனை இல்பொருள் உவமை என்பர். அபூத உவமை என்று தண்டியலங்காரம் குறிப்பிடும்.

ஞாயிறும் திங்களும் இணைந்து மண்ணுலகிற்கு வருவ தென்பது நட வாத ஒன்றாகும்; ஏ ன் நடக்க முடிபாத