பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 127

செயலும் ஆகும். ஞாயிறும் திங்களும் இணைந்து மண்ணகத்திற்கு வருதல் போலத் தமிழ் நாட்டு மன்னர்கள் இருவரும் இணைந்து பகையரசர்களை வென்றனர் என்று கூறப்படுவதனைப் புறப்பாடலொன்றிற் காணலாம்.

உருவச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதிய மொடுகிலன் சேர்ந்தாங்கு உடலருந்துேப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி

-புறநானூறு, 25:3.6

இதுபோன்றே திங்களுள் தீத்தோன்றுவதும், நிழல் நிறைந்த குளத்து நீர்க் குவளை வெந்தழிவதும் ஞ யி ற் று ஸ் இருள் தோன்றுவதும் தலைமகனின் வாய்மையிற் பொய் தோன்றுவது முதலானவற்றோடு

உவமிக்கப்பட்டுள்ளமை இல்பொருள் உவமைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்

தோன்றில்

திங்களுள் தீத்தோன்றி யற்று ஈரத்துள் இன்னவை தோன்றின் கிழற்கயத்துள் நீருள் குவளை வெர் தற்று தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்

சுடருள் இருள்தோன்றி யற்று

-கலித்தொகை 41:23.24; 30.31; 37.38

அக்தாதி உவமை

உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமை யாக்கியும் இயைபுபடுத்தித் தொடுப்பது அந்தாதி உவமை என்பர்.

சிறுபாணாற்றுப்படையில் கதுப்பு உவமையாகவும் பொருளாகவும் வருகின்றது. இவ்வாறே சாயல், அடி, குறங்கு, வாழை, ஒதி, சுணங்கு, முலை, எயிறு முதலியனவும்