பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சங்க இலக்கியம்

நெருப்பும் காற்றும் வானத்தில் தோன்றுவதைப் போலத் துன்பமும் இன்பமும் ஒரே இடத்தில் அமைகின்றன என்பதனை நற்றிணைப் பாடலொன்று நவில்கின்றது.

தீயும் வளியும் விசும்பு பயந் தாங்கு

நோயும் இன்பமும் ஆகின்று மாதோ

-நற்றினை : 294 : 1.2

பல்பொருளுவமை

ஒரு பொருளுக்கு ஓர் உவமை கூறுவது மரபாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களையும் உவமையாகக் கூறும்பொழுது அது வியப்புணர்ச்சியினை வழங்குவதோடு கவிஞனின் கற்பனையாற்றலையும் காட்டி நிற்கின்றது. இவ்வாறு அமையும் உவமை அணியினைப் பல்பொருள் உவமையணி என வழங்குவர்.

முல்லை, மகளிர் பற்களுக்கு உவமை காட்டப்படுவது உண்டு; இது போன்றே முத்தும் மகளிர் பற்களுக்கு உவமை கூறப்படுவது உண்டு. சில சமயங்களில் முல்லையும் முத்தும் மகளிரின் பற்களுக்கு உவமையாகத் தரப்படுதலும் உண்டு. வெண்ணிறமும், வடிவும், ஒளியும் இவற்றின் பொது இயல்பு களாகக் கொள்ளலாம்.

முகைமுல்லை வென்று எழில்முத்து ஏய்க்கும் வெண்பல் -குறிஞ்சிப்பாட்டு 76

அன்னமும் மயிலும் புறாவும் மகளிரின் நடைக்கும் சாய லுக்கும் எழிலுக்கும் முறையே உவமிக்கப்பட்டுள்ளன.

ஆய்துள்வி அனமென அனிமயில் பெடையெனத்

து துணம் புறவு எனத் துதைந் தகின் எழில்நலம்

-கலித்தொகை 56:15.16