பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சங்க இலக்கியம்

கதிரவன் குறிப்பிட்ட காலங்களில் உதிக்கிறான். இடம் விட்டு இடம் ஒடுகின்றான். தன் நிலையில் மாறுபடு கின்றான். மலையில் மறைந்து ஒளிந்து விடுகின்றான். பகலில் மட்டும் உலகிற்கு ஒளி தருகின்றான். சேரமன்னன் இதற்கு மாறாக வீரமும் ஒடுங்கா வுள்ள மும், ஒம்பா ஈகையும் கொண்டு திகழ்கின்றான். அவன் தோன்றுவதற்குக் குறிப்பிட்ட காலம் இடம் என்ற வரையறை இல்லை. எந்தக் காலத்திலும் இரவலர்க்குக் கொடை வழங்குவான். பிறரிட மிருந்து அவன் தன்னை மறைத்துக் கொள்வதில்லை. தனக்கென எதையும் ஒதுக்கி வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு சில வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிக் கதிரவன் சேர மன்னனுக்கு ஒப்பாகமாட்டான் என்று நயம்படக்

கிளத்துகின்றார் புலவர்.

ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் பொழுதென வரை தி புறங்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந்து ஒளித்து அகலிரு விசும்பி னாலும் ப கல்விளங் குதியால் பல்கதிர் விரிந்தே

-புறநானூறு, 8: 4 - 10

சில சிறந்த உவமைகள்

கபிலர் குறிஞ்சி பாடக் கபிலர்’ என அழைக்கப் பெறுபவராவர். ே தாழி தலைமகள் தலைமகனிடத்துக் கொண்ட காதலைப் புலப்படுத்தும் நயம் போற்றத்தக்கது. பலா மரத்தின் சிறிய கிளையில் பெரிய பழம் தொங்குவது போன்று தலைவியின் சிறிய உயிர் கொண்ட இவள் உடம்பில் . பெரிதான காமம் நிறைந்திலங்குகின்றது என்றாள்.