பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சங்க இலக்கியம்

தலைமகள் ஒருத்தி, தலைமகன் மாட்டுக்கொண்ட காதலின் மிகுதியால் அவன் நாட்டு வறண்ட குழிகளில் மான் உண்டு எஞ்சிய கலங்கள் நீர் தேன் கலந்த பாலினும் இனியது என்று இயம்புகின்றான்.

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்காட் உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழி நீரே

-ஐங்குறுநூறு-203:2-4 ஞாயிறு காயும் வெம்மையான பாறையின் பக்கத்தில் கையில்லாத ஊமன் கண்களாலேயே காக்கும் வெண்ணெய் உணங்கல் ேப ா ல த் தலைமகனின் பிரிவுத்துன்பம் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்று கொளற்கு அரிதே

-குறுந்தொகை 58

பழமொழியினை உவமையாக அமைத்தலுக்கும் இப் பாடலை எடுத்துக் காட்டலாம்.

இதிகாச கதை நிகழ்ச்சிகளை உவமையாக எடுத்தாளல்

வள்ளலிடமிருந்து பெற்றுவந்த பரிசுப் பொருள்களில் உயர்ந்த அணிகலன்களைப் புலவர் தம் சுற்றத்தினரிடம் தர, அவ்வணிகலன்களை எங்கெங்கே அணிந்து கொள்வது என்று தெரியாமல் முறை மாற்றி அணிந்து கொண்டனராம். இதுபோன்று இராவணன் சீதையை வெளவிச் சென்ற போது சீதை தன் அணிகலன் களைத் தரையில்போட, பின்னாளில் அதனைக் கண்டெடுத்த குரங்குகள் அவற்றை