பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 137

அணிந்துகொள்ளத் தெரியாமல் முறைமாற்றி அணிந்ததைப் போல என்று உவமை உரைக்கப்படுகிறது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மாதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிங் தாஅங்கு -புறநானூறு.378:18-21

ஐம்பெரும் பூதங்களை உவமை காட்டல்

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங் களின் ஆற்றலோடு மன்னனின் பொறுமை, சூழ்ச்சி, வலிமை

ஆக்கல், அழித்தல் முதலிய ஆற்றல்கள் உவமிக்கப்படு கின்றன.

மண்திணிந்த கிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றாாப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்

வலியும் தெறலும் அளியும் உடையோய்

-புறநானூறு 2:1.8

மகளிர் அழகுக்கு ஊர்களின் எழில்

சங்கக் கவிஞர்கள் பெண்களின் அழகைச் சில ஊர் களின் எழிலோடு உவமித்துப் பேசியிருக்கும் சிறப்பினைப் பின்வரும் தொடர்கள் கொண்டு அறியலாம்.

தண்கு வாயில் அன்னோள்

-அகம். 44:12

சங்க-9