பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பண்டைத் தமிழரின் வணிகம்

Ho- =

ஒரு நாட்டின் தொழில்களிலே உழவும் வணிகமுமே தலைசிறந்தன என்பது அறிஞர் கொள்கை. ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு இவ்விரு தொழில்களும் ஒருங்கு செழித்திருத் தல் இன்றியமையாததாகிறது. தமிழகமும் சங்க காலத்தில் இவ்விரு தொழிலையும் குறைவறப் பெற்றிருந்தது. வியன் மேவன் விழுச்செல்வத்து இருவகையா விசை சான்ற சிறுகுடிப் பெருந்தொழுவர் சூடிகெழி இய நானிலவரொடு எனவரும் மதுரைக்காஞ்சி அடிகளாலும், அப்பகுதிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உலகத்துத் தொழில்களில் மேலாகச் சொல்லும் உழவு வாணிகம் என்கின்ற இரண்டு கூற்றாலே அகலம் பொருந்துதலையுடைய சீரிய செல்வத் தாலே புகழ் நிறைந்த குடிமக்கள் பொருந்திய நான்கு நிலத்து வாழ்வாருடனே” எனக் கூறும் உரையாலும் தமிழ்நாட்டில் இவ்விரு தொழிலும் பெற்றிருந்த செல்வாக்குப் பெறப்படும். இந்நலம் சான்ற வணிகத்தைப் பண்டைத் தமிழர் போற்றியதை ஆய்வதே இக்கட்டுரையின் கொள்கை யாகும்.

பண்டமாற்று

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவை யான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டனர். பண்டமாற்று என்பது