பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சங்க இலக்கியம்

அஞ்சில்ஒதி அசைகடைப் பாண்மகள் சின்மீன் சொரிந்து பன்னெற் பெறு உம்

-ஐங்குறு. மருதம், புலவிப்பத்து. 49 வலைவல் பாண்மகள் வாலெயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனைடோள் யாண்டுகழி வெண்ணெல் கிறைக்கும்

-ஐங்குறு. மருதம், புலவிப்பத்து. 48 6. கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில்

நெய்தல் நில மக்கள் விளைத்த உப்பினை உப்பு வணிகர் மாட்டு வண்டிகளிலே நெல்லைக்கொணர்ந்து கொடுத்துவிட்டு எடுத்துச் சென்றதாக நற்றிணை ச் செய்யுள் குறிப்பிடுகின்றது.

தன்னாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

உமணர் போலும்

-நற். 183 உப்பினை நெல்லுக்கு மாற்றியதைக் கல்லாடனார்,

  • * * * * * * * * * * * ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்

-குறு. 269:4.6

என்று விளக்குகின்றார்.

உப்பை ஊர்த்தெருக்களில் விற்ற உமணப்பெண்

நெல்லுக்கு மாற்றியதை அம்மூவனார் குறிப்பிடுகின்றார்.

கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை தெளிர்ப்ப விசி நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் சேரிவிலை மாறுகூறலின்

-அகம். 140:5-8