பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 146 சங்க இலக்கியம்

பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர்மிதி மிதவை யார்த்துவம்

-நக்கீரர், அகம். 340:14-15

உப்பு கொடை நெல்லின் மூரல் வெண்சோறு

-குடவாயில் கீரத்தனார் அகம். 60:4

மீனை நெல்லுக்கு மாற்றினர். கிடைத்த நெல்லினை அம்பியில் ஏற்றுக்கொண்டு கழிகளில் வழியே வந்ததைப் பரணர் தெளிகின்றார்.

மீன்தொகுத்து நெல் குவை இ மிசை அம்பியின் மனைமறுக்குந்து

-புறம். 343:1-2

பரதவமகளிர் கடல் மீனைத் திருவிழா நடக்கிற ஊர் களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார்,

திமிலோன் தந்தக டுங்கண் வயமின் தழையணி அல்குல் செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகரும் கானலஞ் சிறுகுடி

-அகம். 320:2-5

என்னும் சங்கப்பாடலின் மூலம் உணர்த்துகின்றார்.

8. உழவர் மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ கூறுகிறார். துகிலிகை அன்ன துய்த்தலைப்பாதிரி வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப் புதுமலர் தெருவதொறும் நுவலும் நொதுமலாட்டி 一厄面。118:8-11

பெண் ஒருத்தி மலர் விற்றதைப் பாண்டியன் மாறன் வழுதி தம்முடைய செய்யுட்களில் கூறுகிறார்: