பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 149

அம்பன வளவை யுறைகுளித் தாங்கும் கடுந்தே றுறுகினை மொசிந்தன துஞ்சும்

-பதிற். 71:5-6

நாணய மாற்று

பண்டமாற்று வழங்கிய காலத்திலும் காசு வழங்கப் பட்டது. செம்பு, வெள்ளி, பொன் முதலிய காசுகள் வழங்கி வந்தன என்பதைச் சங்க இலக்கிய ஆடிகள் பிரதிபலிக் கின்றன.

1. காசுகள் நெல்லிக்காயின் வடிவம் போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகின்றார். பாலை நிலத்து நெல்லிக்காய்கள் பொற் காசுகள் உதிர்ந்து கிடப்பன போலக் காணப்பட்டன என்று அவர் கூறுகின்றார்.

புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்

கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்

பொலஞ்செய் காசிற் பொற்பத்தாஅம் அத்தம்

-அகம். 863:6.8

2. உகா மரத்தின் பழம்போல மஞ்சள் நிறமாக பொற்காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார்கூறுகின்றார்.

குயில்கண் அன்ன குரூஉக்காய் முற்றி மணிக்கா சன்ன மாணிற இருங்கனி உகாஅ மென்சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ்சுரம் 8. பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அறையைச் சுற்றி அணிந்து கொண்டதைச் சங்கப்

புலவர்கள் அறிவிக்கின்றனர்.