பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சங்க இலக்கியம்

மழைபெயல் மறந்த கழைதிரங் கியவில்

செல்சாத் தெறியும் பண்பில் வாழ்க்கை

வல்வில் இளையர்

-அகம். 245:5-7 மருதனிள நாகனார்

சங்ககாலத்து வாணிகம் தரைவழியாகவே இருந்தது. தரைவாணிகம் செய்த பெருவணிகருக்கு மாசாத்துவான் என்று பெயர். தரை வாணிகத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரர்கள் தொல்லை கொடுத்தனர். எனவே வணிகர்கள் தங்களுடன் வில் வீரர்களையும், வாள் வீரர்களையும் உடன் அழைத்துச் சென்றனர். தரைவழியாக வட இந்திய நகரங் கட்குச் சென்று வாணிகம் செய்தவர்கட்குப் பெருங்குடி வணிகர் என்பது பெயர்.

சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் தரை வணிகர்களிடமிருந்து சுங்கம் வாங்கியதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன் காட்டியவு

இன்னணம் தமிழர்களின் தரைவாணிகம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது.

ஈ. கடல் வாணிகம் - கரையோர வாணிகம்

தரை வாணிகத்தோடு தமிழர்கள் கடல் வாணிகத் தினையும் மேற்கொண்டனர். கடல் வாணிகத்தில் கரை யோர வாணிகம், நடுக்கடல் வாணிகம் என இருவகை யுண்டு. மரக்கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச்