பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சங்க இலக்கியம்

கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறு களையும் அறுத்துப் பாய்மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக்கல்லில் மோதி நீர்ச்சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகின்றார்.

பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் வீங்குபிணி நோன்கயிறு அறிஇ இதை புடையூக் கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன் கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரை இ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்

-மதுரை. 375 - 379

சாதுவன் என்பவன் கடற்பயணம் செய்தபோது கப்பல் நாகர்மலைத் தீவுக்கு அருகில் முழுகிப் போனதையும், அவன் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு தீவில் கரையேறியதையும்

நளியிரு முந்நீர் வளிகலன் வவ்வ ஒடிமரம் பற்றியூர் திரை யுதைப்ப நக்கசாரணர் நாகர் வாழ் மலைப் பக் கஞ் சார்ந்தவர் பான்மையின் ஆயினன்

—шаблоfl. 16- 13. 16

என்னும் மணிமேகலை அடிகள் பகர்கின்றன.

மணிபல்லவத்தினின்று காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கப்பலில் வந்த கம்பளச் செட்டி என்பவனின் கலம் இரவில் கரையை அடைகிற நேரத்தில் கவிழ்ந்தது என்பதனை மணிமேகலை நவில்கின்றது.

துறைபிறக் கொழியக்

கலங் கொண்டு பெயர்ந்த அன்றே காரிருள்

இலங்குன்ே அடைகரை யக் கலங் கெட்டது

—цаякifl. 25. 189-191