பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சங்க இலக்கியம்

வணிகச் செல்வர்கட்கு எட்டிப்பட்டமும், எட்டிப்பூவும் அளித்துச் சிறப்பித்தனர். காவிரிப்பூம்பட்டினத்தில் சாயலன் என்னும் வணிகன் எட்டிப்பட்டம் பெற்றிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

எட்டிச் சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில்

-அடைக்கலக் காதை. 163-164

எட்டிப்பட்டம் பெற்றிருந்த ஒரு வா னி க ைன மணிமேகலைக் காவியம் கூறுகிறது.

வணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள் நிதிச் செல்வனாய் நீனில வேந்தனில் எட்டிப் பூப்பெற்று இருமுப்பதிற் றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்

unলতf . 22, 11 1-1 14

பிறநாட்டு வாணிகம்

தமிழ் வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர்.

மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்

-சிலம்பு. 6:43

மொழி பல பெருகிய பழிதீந் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம்

-பட்டினப்பாலை. 216-218

இப் பகுதிகள் அக்காலத்தில் வணிகத்தில் உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல்