பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'364 - சங்க இலக்கியம்

2. யவன வணிகர்

1. கிரேக்கரும் உரோமரும் யவனர் எனப்பட்டனர், யவனர் ரோமாபுரியிலிருந்து வந்து ஆசிய ஐரோப்பாக் கண்டங்களின் மத்தியத்துறைமுகப் ப ட் டி ன த் தி ல் (அலெக்சாண்டிரியா) தங்கினர். பின் அரபியரின் செங் கடல் வாணிகத்தைக் கைப்பற்றினர். செங்கடலை எரித்ரைக் கடல் என்றே அழைத்தனர். அரபிக்கடல், குமரிக்கடல், வங்காளக் குடாக்கடல்களுக்கு வந்து வாணிகம் செய்தனர். இக் கடல்களையும் எரித்ரைக் கடல் என்றே அழைத்தனர்.

2. யவனர் அக் காலத்தில் நடுக்கடலில் பயணம் செய்யாமல் கடற்கரை ஓரமாகவே பயணம் செய்தனர். பின்னர் ஹறிப்பலஸ் என்னும் அறிஞன் பருவக் காற்றின் பயனை அறிந்தபோது யவனர்கள் கப்பல்கள் மூலம் நேராகத் தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

3. அகஸ்தஸ் - சீசர் என்னும் அறிஞன் யவன - தமிழர் வணிகத்தை விரிவுபடுத்தினான்.

4. உரோமாபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்டன. அவையும் தமிழ் யவனர் தொடர்புக்குச் சானறு பகர்கின்றது.

5. தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் யவன வணிகர் செய்த வணிகத்தைச் செங்கடல் வாணிகம் என்ற பெயர் பெற்ற நூல் விளக்குகின்றது.

6. உரோம் சாம்ராச்சியத்தை ஆண்ட அகஸ்தஸ்

சீசருக்கு மதுரையிலிருந்து ஒரு பாண்டியன் துனது அனுப்பினான்.