பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 165

7. வணிகத்தின் காரணமாக வந்த தமிழர் பின் தமிழகத்தில் தங்கித் தச்சுத் தொழில் செய்தனர்.

யவனத் தச்சர்

-மணிமேகலை. 19: 103

அரிக்கமேடு என்னும் இடத்திலிருந்த ய வ ன த் தொழிலாளிகள் சிலர் கண்ணாடி மணிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

8. கோட்டை வாயிலை யவன வீரர்கள் காவல் காத்திருந்ததைச் சிலம்பு குறிப்பிடுகின்றது.

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு

-சிலம்பு. ஊர்காண். 66 - 67

9. பாண்டியனுடைய பாசறையில் இருந்த யவனர் களைப் பற்றி முல்லைப்பாட்டு குறிப்பிடுகின்றது.

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்கு வெருவருங் தோற்றத்து

வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்

-முல்லை. 59 - 61

10. யவனர் தமிழர் வணிகத் தொடர்பின் காரண மாகச் சில கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. மத்திகை சுருங்கை, கலம் கன்னல்.

1. மத்திகை-முல்லைப்பாட்டு 59ஆம் அடி

2. சுருங்கை-கிரேக்கச் சொல்-சுரங்கம்

சுருங்கை நெடுவழி-பரிபாடல் 20: 104 சுருங்கை வீதி-சிலம்பு. 14: 65