பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 167

யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல் நிறைய நெய்சொரிந்து பரூஉத்திரி கொளிஇய கரூஉத்தது கிழற்எரி

-நெடுநல்வாடை 101; 108 பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ

-முல்லை. 85

யவன ஓதிம விளக்கு

-பெரும்பாண். 316.317

12. யவன வணிகர் பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்துத் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிச் சென்றனர்.

13. கொங்கு நாட்டில் கரூர், காட்டன்கன்னி, குளத்துப்பாளையம், .ெ ப ா ன் ன ர், பொள்ளாச்சி,

வெள்ளலூர் முதலான இடங்களிலும் பாண்டி நாட்டில்

மதுரை கலையம்புத்துார், கரிவலம் வந்த நல்லுனர். புதுக் கோட்டையைச் சார்ந்த கடுக்காக் குறிச்சியிலும், தஞ்சை, மகாபலிபுரம் முதலான ஊர்களிலும் கிடைத்

துள்ள யவன நாணயங்கள் அக் காலத்தில் நடந்த தமிழ் -யவன வாணிகத்துக்குச் சான்றாக இருக்கின்றன.

14. யவனர் தந்த தண்கமழ் தேறல்

பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் கொடுப்ப

-புறம். 56

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

-அகம். 149

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

-சிலம்பு