பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சங்க இலக்கியம்

லேயே அவர்கள் வாழ்வில் புகுத்தப்பட்டன. பண்டு நாட்டிலிருந்து ஒபிர் என்ற அதன் துறைமுகத்தி லிருந்தும் கலங்கள் அடிக்கடி சென்று வந்தன. பண்டு என்பது தென்னாட்டுப் பாண்டிய நாடு. ஒபிர் என்பது கன்னியாகுமரியை அடுத்த உவரி என்ற பண்டைத் துறைமுகம். தங்கத்துக்கும் முத்துக்கும் பெயர் போனது.

ஐரோப்பாவோடு தென்னிந்தியா ஏறத்தாழக் கி.மு. 500 முதல் வாணிகம் தொடங்கியது. தென்னிந்தியப் பொருட்களை மேற்கு ஆசியாவிலிருந்து பெற்று ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தவர் கள் கிரேக்கர்களே. ஆகைய ல் தென்னிந்தியப் பொருட்கள் சிலவற்றின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க மொழியில் பு கு ந் த ைம வியப்பிற்குரியதன்று. சோபாகிளிஸ், அரிஸ்டோபெனிஸ் முதலியோரின் நூல் களில் இப்பெயர்கள் இணைந்துவிட்டன.

தமிழ்-கிரேக்கம் அரிசி-ஒரிசி கருவாய்-கார்ப்பி இஞ்சி-சிக்கி பெரோசு பிப்பிலி-பெப்பரி

உரோம வல்லரசன் அகஸ்டஸின் காலத்தைச் சேர்ந்த ஸ்டிராபோனின் விவரணம், சுமார் கி.பி. 60இல் தோன்றிய பெரிபுளுஸ் என்னும் நூல், பிளினியின் இயற்கை வரலாறு என்னும் நூல்களில் கிறிஸ்துசகாப்தத் தில் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஐரோப்பாவோடு நடை பெற்ற தென்னிந்திய வாணிகத்தைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன:

கி.மு. 6 முதல் கி.பி. 6 வரை தொடர்ந்து நடை பெற்ற உரோம - யவன வணிகம் கி.மு. முதல்