பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சங்க இலக்கியம்

தென்குமரி வடபெருங்கல்

குணகட கடலா எல்லை

-புறம். 17: வரி 1.2

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து

[D] -தொல். சிறப். பாயிரம் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குமரிக்குத் தெற்கே இருந்த 49 நாடுகளான 1) ஏழ் தெங்க நாடு 2) ஏழ் மதுரை நாடு 3) ஏழ் முன்பாலை நாடு 4) ஏழ் பின்பாலை நாடு 5) ஏழ்குன்ற நாடு 6) ஏழ் குணகான நாடு 7) ஏழ் குறும்பனை நாடு என்பவற்றைக் குறிக் கின்றார்.

தமிழினத் தொன்மையைச் சுட்டவரும் புறப்பொருள் வெண்பாமாலை,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி

எனக் குறிப்பிடுகின்றது.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரிதல் இல் என்னும் திருக் குறள் உரையில் பரிமேலழகர், “பழங்குடி தொன்றுதொட்டு வருகின்ற குடி : தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருதல்’ எனப் பொருள் கூறினர்.

ஆதிமாலமல நாபி கமலத் தய னாதித்

தயன் மரீசியெனு மண்ணலை யளித்த பரிசும்

காதல் கூர் தரு மரீசி மகனாகி வளருங்

காசிபன் கதிரருக்களை யளித்த பரிசும்

அவ்வருக்கண் மகனாகி மனமே திரிபுரந்

தரிய காதலனை யாவினது கன்று நிகரென்