பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சங்க இலக்கியம்

1. காவிரிப்பூம்பட்டினம்

வெளிநாட்டிலிருந்து வந்த பண்டங்கள் ஈங்கு இறக்குமதி செய்யப்பட்டன.

H. H. H. * * * * * * சும்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தகா அர் புகா அர்ப் புகுந்த பெருங்கலந் தகா அர் இடைப்புலம் பெருவழிச் சொரியும் கடற் பஃறாரத்த நாடு கிழவோயோ

-புறம். 30:10-14

இத்துறைமுகத்தின் கரையருகே உயர்ந்த மேடை களும் பண்டகசாலைகளும் இருந்தன. அவ்விடத்திற் குவிந்துள்ள பொருள்களில் சோழர் மு. த் தி ைர பொறிக்கப்பட்டது.

நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்வணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதி நிறைந்த மலிபண்டம்

-பட்டினப்பாலை, 129.136

இத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியான பொருட் கள், மலைபோல் காணப்பட்டன.

2. முசிறி

தமிழ்நாட்டுப் பொருள்களைக் கொணர்ந்து தமிழ் நாட்டுப் பொருள்களை எடுத்துச் செல்லும் வணிகர் வந்த நாவாய்கள் பல இத்துறைமுகத்தில் நெருங்கி