பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 179

என்னும் கருத்தால் மட்டும் அவர் இத்தொழிலை நடத்த வில்லை. பல இடங்களில் விளையும் பல்வகைப் பண்டங் களை ஒரிடத்திற் கொண்டு வந்து குவித்து, அப்பண்டங்கள் கிடைக்காத வேறிடங்களுக்கு அவற்றை அனுப்பி நாடு முழுவதும் வறுமையின்றி நலமாக இருக்க அவர் வழி தேடினர். வணிகர்களின் பண்பினைப் பட்டினப்பாலை மிக நயம்பட நவில்கின்றது.

நெடுநுகத்துப் பகல்போல நடுவுகின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவுமொப்ப நாடிக் கொள்வது உ மிகைகொளாது கொடுப்பது உம் குறைபடாது

-பட்டினப்பாலை, 206-210

மதுரைக்காஞ்சியும் வணிகரின் பண்பினை விளக்கா நிற்கின்றது.

அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி

வணிகத்தின் சிறப்பினைக் கூறவரும் பொய்யில் புலவரும்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்

கலங்கரை விளக்கம்

பெருங்கப்பல்களும் செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக்கடலிற் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்தில் திசை தடுமாறாது கரைசேர்தற்குத் துணையாகக் கடற்கரைப் பட்டினங்களில் கலங்கரை விளக்கங்களை அமைத்தனர். ஆழ்ந்த கடலிற் செல்லும் கலங்களுக்குத் துணையாகவுள்ள விளக்குகளைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பாடுகின்றது.