பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சங்க இலக்கியம்

இன்புறாத உயிர்கள் இல்லை எனலாம். ஒரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் ஈறாக இசையில் தம்மை மறக் கின்றன.

தமிழ் இசை

இசை இனியது. தமிழ் இசை அதனினும் இனியது. தமிழ் இசை உள்ளத்தோடு உணர்வோடு வாழ்க்கையோடு பொருந்தியது. இது வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் அரும்பியது என்றாலும் இன்றும் இயல்பு பொன்றாது பொலிவு குன்றாது இளமை தாழாது எழில் மாளாது சுவை மாறாது. ஆற்றல் ஆறாது நிலைத்து நிற்கின்றது. இதற்கு முடிவில்லை. இதன் வாழ்வு எல்லையற்றது. இதன் தன்மை இன்பந் தருவது. இதன் ஆற்றல் அளவிடற்கரியது. இதன் தரம் ஒப்புமை அற்றது. இசையின் அருமையையும் பெருமை யையும் ஒர்ந்தே பழந்தமிழர் இசைத் தமிழை முத்தமிழுள் நடுநாயகமாக வைத்தனர்.

இசையின் இனிமை

“இசை எழுச்சி தரும் முதன்மை வாய்ந்தது. அது புறப்பகட்டானது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில் கருத்தியல் கோட்பாடேயாகும்’ என்பர் மேனாட்டு அறிஞர்களான பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும்.

“இசை இன்பக் கலைகளின் முடி’ என்பர் காண்ட் என்னும் அறிஞர். சுருங்கக் கூறின் இசை மெய்விளக்கியலின் நுட்பம், தெய்வீகப் பண்பு ஆகிய இரண்டின் உட்கருத்தாக உந்தி இசை வரலாற்று அரங்கில் முதல் பங்கு எடுக்கிறது.

இசையின் ஏற்றம்

“இசையாவது வரலாற்றின் ஊழியில் துளிர்த்த ஒடு சமுதாயக் கலையாக மிளிர்கிறது. எந்தப் பண்பாடும்