பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சங்க இலக்கியம்

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன ஏழு சுரங்களாகும். இவை தற்போது சட்ஜம், ரிடபம். காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்று வழங்கப்படுகின்றன, இவற்றின் முதல் எழுத்துக்களை சரிகமபத நி என்பர். இவை ஏழும் நிறைந்தது பண் என்றும் இவற்றில் குறைந்து வருவது திறம் என்றும் பெயர் பெறும். நெட்டெழுத்துக்கள் ஏழும் ஆலாபனையில் பயன்பட்டன 6) ЈГШ •

1. தாரம்

இது மெய் எழுத்தாய ‘க’ என்ற குறியீட்டெழுத்து உடைமையால் காந்தாரம் எனப்பட்டது. இதுவே முதல் இசையாகும். காந்தர்வம் இன்பத்திற்குக்

காரணமாக இருப்பது போன்று இவ்விசை இயல்பாக இக் காலத்துத் தம்பூர் என்ற கருவியிலும் முறை சுருதி சேர்க்கப்பட்டால் ஒலிக்கின்ற ஒலித்தன்மையில் உள்ளிடாகக் கேட்கப்படுவது.

2. குரல்

தமிழ் மரபில் ஒரிசை ஈரிசை மூவிசை என்ற பகுப்பு அமைதியில் இரண்டாம் இசையாய குரல் எனும் இவ்விசை மகளிர் குரலை ஒத்தது எனப்படும். நடுவான இடத்தைப் பெற்றிருப்பதால் இது மத்திமம் எனவும் கூறப்படும்.

3. துத்தம்

இது தொந்தம், துருத்தி என்ற சொற்களைப் போன்று முன்னுள்ள எல்லை, பின்னுள்ள எல்லை, ஆகியவைகளின் அளவு ஒத்திருக்க நடுநின்றமையால் துத்தம் எனப்பட்டது. இனி முறையில் ஐந்தாவதாக நிற்பது கருதிப் பஞ்சமம் என்று பகரப் பெறுவதும் வழக்காயிற்று.