பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சங்க இலக்கியம்

துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை

-புறம். 335 என்று புறம் செப்புகின்றது.

இசைக் கலைஞர்களாய துடியர்களும், பாணர்களும், பறையர்களும் பிற்காலத்தில் புறநகரில் ஒதுங்கி வாழ்ந்தவர். அவர்கள் வறியர்களாய் வாழ்ந்து வந்தனர் என்றாலும் அவர்கள் இழிந்தவர்களாக எண்ணப்படவில்லை. பாணர் களையும் பாடினிகளையும், விறலியர்களையும், துடியர் களையும், பறையர்களையும் , அரசர்கள் தம் அவைகளில் இடம்பெறச் செய்து அவர்களின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும், சுவைத்தும் வந்தனர். பானர்க்கும் பாடினியருக்கும் விறலியர்க்கும், பிறர்க்கும் பொற்றாமரைப் பூவும், பொன்னரி மாலையும் முத்து வடமும் பரிசளித்து வந்தனர் என்பதை,

எரியகைந் தன்ன வேடி றாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்களின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய

-பொருந. 159-162

என்னும் பொருநராற்றுப்படை வரிகள் உ ண ர் த் தி நிற்கின்றன.

பொன்னாற் செய்த தாமரைப் பூவை, பாணனது கறுத்த தலைமயிரிலே பொலிவு பெறச் சூட்டிப் பொன்னரி மாலையை வெள்ளிதாகிய ஒளியையுடைய முத்தத்தோடே பாடினி ஆட வலிமை மிக்க சோழ அரசன் கரிகாற் பெருவளத்தான் நல்கினான் என்று சங்கநூல் சான்று தருகின்றது.

பாணர்களுக்கு அரசர்கள் அளித்த பரிசும் சிறப்பும்,