பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சங்க இலக்கியம்

வயிரியர்

வயிரியரும் ஒரு வகை ஆடல் மக்கள். பண் அமைந்த நரம்பினையுடைய தோலாற் போர்க்கப்பட்ட யாழையும் மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையுமுடைய வயிரியர் என இவரைப் புறநானூறு குறிக்கும்.

பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோயே

கோடியர்

கோடியரும் கூத்தராவர். விழாவின் கண் ஆடும் கோடி யரின் வேறுபட்ட கோலம்போல அடைவடைவே தோன்றி இயங்கி போகின்ற இயல்பையுடையது இவ்வுலகம் என உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடுவர்.

■-■-■ ■ ■■ 轟 ■■ ■■ 睡 轟,圖 .... ........ விழவிற் கோடியர் நீர் மைபோல முறைமுறை

ஆடுநர் கழியு மில்வுலகத்து

-புறம் 29:22.24

இசைச்சங்கம்

தமிழகத்தில் முத்தமிழும் வளர்க்க முப்பெரும் சங்கங்கள் இருந்தன. அவை முதல், இடை, E5 FFHD L- என மூன்று சங்கங்கள். இந்த முத்தமிழ்ச் சங்கம் மூன்றிலும் இசைத் தமிழ் ஆய்வு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை ஆய்வு நடத்த கண்ணாகனார், கேசவனார், நல்லச் சுதனார் முதலிய இசைப் புலவர்கள் இருந்து வந்தனர்.

தமிழ்மூதாட்டி என்று போற்றப்பெறும் ஒளவைப் பெருமாட்டி பிள்ளையாரை நோக்கி,