பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சங்க இலக்கியம்

பாடியும், இசைக் கருவிகளை இயக்கியும், இசை நூல்கள் இயற்றியும் வந்தனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம் உரைப் பாயிரத்தில் பண்டிருந்த பல இசை நூல்களின் பெயர்களைத் தந்துள்ளார்.

அகத்தியம், இசைநுணுக்கம், இந்திர காளியம், குண நூல், கூத்தநூல், செயிற்றியம், தாளவகையோத்து, நூல், பஞ்சபாரதீயம், பஞ்சமாபு பரதசேனாபதியம், பரதம், பெருங்குருகு, பெருநாரை, நாடகத் தமிழ் நூல், முறுவல், முதலிய நூல்கள் அடியார்க்கு நல்லார் காலத் தில் இருந்த இசைநூல்கள் ஆகும். இவையாவும் இன்று இறந்துபட்டன.

இசைக்கருவிகள்

இசையை எழுப்பும் கருவிகள் பலவகைப்படும். இக் கருவிகளைப் பசிய நிறமுள்ள பைகளுக்குள்ளே போட்டு கார்காலத்தில் பழுக்கும் பலாக்காய்களைப் போன்று தோளில் வைத்துச் சுமக்கும் கம்பின் இருபக்கத்திலும் பாரம் ஒத்திருக் கும்படி கட்டித் தூக்கிச் செல்வர் பானர்.

கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையர்

-மலைபடு. 12.13 இவ் விசைக்கருவிகளைத் தோற்கருவிகள்,துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள், மிடற்றுக்கருவிகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

யாழ்

சங்க நூல்களில் வில்யாழும், சீறியாழும், பேரியாழும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

■ ■■ ■■■ ... ........ ......... குமிழின் புழற்கோடறாத் தொடுத்த மரபுறி நரம்பின்

வில்யாழ்

էք -பெரும்பாண். 180.182