பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 217

சிறப்பு புலனாகும். சங்க காலத்தில் சிறப்புற்ற ஒன்றாக அமைந்து துலங்கிய இசை பல்லவர் காலத்தில் பெற்ற நிலையினை இனிக் காண்குவம்.

பல்லவர் காலத்தில் இசை

கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல்லவராட்சி ப|பட்டது. வடநாட்டில் குப்தர் ஆட்சிக் காலத்தில் Iதான் றியநெறியான ஆடிப்பாடிக் கடவுளை வணங்கும் பக்தி நெறி தமிழகத்தில் பரவியது. சமணர், பெளத்தர், வைதிகர் துழைவாலும் செல்வாக்கினாலும் வடமொழி தமிழகத்தில் வால்கொண்டது. வடசொற்களும், வடமொழி இலக்கண நூல்களும் வழிபாட்டு முறைகளும் தமிழில் புகுந்தன. இந்த மாறுதல்களைத் திருநாவுக்கரசர் முதலிய சமயக்குரவர் பாடல்களிலும் ஆழ்வார் பாடல்களிலும் காணலாம். காந்தாரம், தக்கேசி, சாதாரி, காந்தார பஞ்சுரம், கெளசிகம், மேகராகம் முதலிய பண்வகைகளும், சதகம், தசாங்கம், பதிகம், யமகம், முதலியனவும் வடவர் கூட்டுறவால் நிகழ்ந்தவையாகும்.

தேவார ஆசிரியரும், பிற சைவப் பெரியார்களும் இசைபாடி இறைவனை மகிழ்வித்தனர். இறைவனையே இசை வடிவத்தில் கண்டனர். இயலவன். இசையவன், பண்ணவன், என்றெல்லாம் நாயன்மார்கள் இறைவனைப் போற்றினார்கள். ஞானசம்பந்தர் தாளமிட்டும், பதிகங் களைப் பாடி இறைவனைத் திங்கள்தொறும் சென்று வணங்கினர். திருநாவுக்கரசரும், சுந்தரரும் இப்படியே இசைபாடி இறைவனைப் போற்றினர். பெண்களும் இறைவ றுடைய பல தன்மைகளைப் பாடிக்கொண்டே கழல், பந்து, அம்மானை முதலிய ஆட்டங்களை ஆடினர் என்று சம்பந்தர் பாடல் தெரிவிக்கின்றது. இவ்வாறே இளம் பெண்கள் பூக்கொய்தல், சுண்ணம் இடித்தல் முதலிய பல வேலைகளைச் செய்துகொண்டே இறைவன் சிறப்புக்களை

சங்க.-14