பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சங்க இலக்கியம்

சோழர் காலம்

வடவர் கூட்டுறவால் பலவகைச் சந்தங்கள் தமிழில் புகுந்தன. வடுகச்சந்தம், கருநாடகச் சந்தம் முதலிய சந்தங்கள் யாப்பருங்கல விருத்தியுரையில் குறிக்கப் பட்டுள்ளன. வேதச் சுலோகங்கள் ஒருவகைச் சந்தத்தில் பாடப்பட்டன. அவற்றைப் பாடியோர் ஆரியம் பாடியோர் எனப்பட்டனர்.

ஒன்பதாம் திருமுறையிலுள்ள பாக்கள் திருவிசைப் பாக்கள் எனப்பட்டன. இராச இராசன் எழுப்பித்த இராச இராசேச்சுவரம் என்னும் பெருவுடையார் திருக்கோயில் தமிழிசையின் தாயகம் போல் நிலவியது. இங்குத் திருப்பதிகம் விண்ணப்பம் செய்ய 48 பேர் நியமிக்கப்பட்டனர். கொட்டி மத்தளம் வாசிக்க இருவர் நியமிக்கப்பட்டனர். இவர்களன்றி ஆரியம் பாடச் சிலரும், தமிழிசை பாடச் சிலரும், ஆடல் பாடல் இயற்ற 400 தனிச் சேரிப் பெண்டுகளும் குடியேற்றம் பெற்றனர். இசையில் வல்ல ஏந்திழையார்கள் கந்தர்விகள் என்றும், இசையில் வல்ல ஆடவர்கள் கந்தவர்கள் என்றும் அழைக்கப் பெறலாயினர். அங்கு கந்தவர்கள் மட்டும் 75 பேர் இருந்தனர். கொட்டி மத்தளக்காரர், துணைக் கருவி யாளர், வீணை மீட்டுபவர்கள், வங்கியம் - பாடவியம் மொராலியம் - உடுக்கை முதலியவைகளை இசைப்பவர் களுமாகப் பலர் இருந்தனர். கரடிதை - சகடை - உவச்சகப் பறை முதலிய தோற் கருவிகளை முழக்குபவர்கள் பலர்

இருந்தனர்.

அரசன் நம்பியாண்டார் நம்பியின் துணைக்கொண்டு மூவர் கை இலச்சினை பெற்ற காப்பினையுடைய தேவாரத் திருப்பதிகங்களைத் தேடி எடுத்துப் பு ற் றி ன ா ல் பொன்றியவை போக எஞ்சியவற்றை எடுத்துத் தொகைப் படுத்தி வகைப்படுத்தித் திருமுறைகளாக, கோயில்கள் தோறும் ஓதும் வண்ணம் ஏற்பாடு செய்தான் என்பர்.